GOOGLE

Monday, May 18, 2015

சமூகத்தின் பிசாசுகள்




இச்சமூகத்தில் பிசாசு இருக்கு என்றும் , பேய்கள் இருக்கு என்றும் இந்த ஆறறிவு கொண்ட மனிதர்கள் சொல்ல கேட்டதுண்டு, அப்போதெல்லாம் எனக்கு அதன்மேல் நன்பிக்கை இல்லை இருந்தாலும் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை ஏனெனில் சொல்வது ஆறறிவு கொண்ட மனிதனாச்சே அவனும் இச்சமுதாயத்தில் வாழும் ஆறறிவு அதிசியமாச்சே ( மற்ற உயிர்களுக்கெல்லாம் அயிந்தறிவாம், ஆறறிவை வைத்து வஞ்சகம் செய்யும் நம்மளைவிட ஐந்தறிவோடு வாழும் மற்ற உயிர்கள் நம்மை விட 1000 மடங்கு மேலானவை )


இன்று எத்தனையோ நிகழ்வுகள் இந்நாட்டில், ஏன் நாம் ஊரில், ஏன் நம் வீதியில் நிகழ்த்து கொண்டுள்ளன.துக்கம் ,தூவல், துன்பம், இனிமை, இன்பம் ,தனிமை , புகழ்ச்சி , வஞ்சகம்,ஏடல் , ஏக்கம் என எவ்வளவோ எம்மக்களை தினம் , தினம் உறிஞ்சி தின்னும் அட்டை பூச்சிகளாய் அதிகரித்து கொண்டுள்ள நிலை இங்கு வாழும் எந்த ஆறறிவு படைத்த மனிதனுக்கு ஏன் தெரியாமல் போனதோ? தெரிவர்தர்க்கு இவன் ஒன்றும் நடிகன் இல்லை என ஏளன மனதோ ? இல்லை இந்த பிச்சை எடுக்கும் ஊடகங்கள் எம் மக்களுக்கு தெரிய படுத்தவில்லையோ? இவர்களுக்கு உழைக்கும் வர்க்கம் தெரியவில்லை , தள்ளாடும் முதியர்வளை காண நேரமில்லை, உண்ண உணவும் , வாழ வாழ்க்கையும் கொடுத்தவனை பற்றிய கவலை இல்லை, ஒரே கவலை இவனுக்கு காசுக்காக விளையாடும் ஒருவன் ஒரு நடிகைக்கு இரவில் விளக்கு பிடித்ததால் பகலில் சோர்வாகி விளையாடவில்லையாம் இதுதான் இன்று இந்த ஆறறிவு மகான்களுக்கும் , பிசாசு ஊடகளுக்கும் இருக்கும் ஒரே வேதனை


சோறு போடும் விவசாய் இன்று குடிநீருக்காக பட்டனி போராட்டம் செய்கிறான் ? மண்ணை காப்பாற்ற மணிகணக்கில் மெனகெடுகிறான், அரசாங்களால் செய்ய வேண்டிய போராட்டத்தை இன்று அவர்கள் ஆதரவு இல்லாமல் அடிமட்ட உழைக்கும் மக்கள் செய்கிறார்கள் இவை எல்லாம் விளையாடுகாரனுக்கும் , நடிகனுக்கும் விளக்கு புடிக்கும் இம்மனிதர்களையும், 24 மணி நேரமும் ஒரு குறிப்பிட்ட மேலாதிக்கத்தை போற்றிகொன்டே இருக்கும் தீய ஊடகங்களையும் பார்க்கும்போதுதான் இன்னும் பிசாசுகளும் , பேய்களும் அதிக எண்ணிகையில் இச்சமுதாயத்தில் உள்ளன என்பதை உணரமுடிகிறது

No comments:

Post a Comment