GOOGLE

Monday, May 18, 2015

விளம்பர பிசாசு ஊடகங்கள்

விளம்பர பிசாசு ஊடகங்கள்

இந்த நாட்டில், பொதுவாக தமிழ் நாட்டில் ஊடகங்கள் என்பவை எதற்காக இருகின்றன என்றே தெரியவில்லை, ஊடகங்கள் என்றால் நடுநிலை , நல்ல கருத்துக்களை மக்களிடம் சேர்த்தல், விழிப்புணர்வு ஏற்படுத்தல், கல்வி விழிப்புணர்வு, விவசாயம் என்ற நல்ல, நல்ல கருத்துக்களை சொல்வதுதான் ஊடகங்களின் கடமை. ஆனால் இன்று எத்தனை ஊடகங்கள் அதை செய்கின்றனர்.
இன்று நடக்கும் குற்றங்களுக்கு ஊடகங்களும் ஒரு காரணம். உண்மையை பொய்யாகுதல், பொய்யை உண்மையாகுதுதல் நிகழ்வே அதிகம் பரப்பபடுகிறது. அதற்க்குமேல் எல்லா ஊடகங்களும் ஏதோ நடிகைகளின், நடிகர்களின் கூத்தாடிகளின் கூடாரமாகவே அவர்களின் காளை கழுவும் கலவானிகலாகவே இருக்கின்றனர்


ஒரு பெண். பெண் கூட இல்லை ஒரு குழந்தை பாலியல் செய்து கொல்லபடுகிறாள் அது ஒரு வார்த்தை செய்தியாகவும், ஒரு நடிகை /நடிகன் கொல்லைப்புறம் போனால் ஒரே திருவிழாகவும் இந்த ஊடகங்கள் காட்டுகின்றனர் / கொண்டாடு கின்றனர். சென்ற வாரம் ஒரு நடிகனின் படம் திரைக்கு வந்தது, பேசும் வசனம் முதல், காட்டும் காட்சி வரை எல்லாம் கிராபிக்ஸ் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். அதிலும் அவர் சம்பாதித்த பணத்தில் அணைகட்டி தமிழக மக்களுக்கு தருகிறாராம். இவ்வாறு காட்சிகளை எடுத்து அவற்றை தமிழனிடமே காட்டி தமிழனை சுரண்டி தமிழனையே, தமிழனை இழிவு படுத்தும் ஒரு படத்தை எல்லா ஊடகங்களும் நாள்முழுவதும் ஏன் வாரம் முழுவதும் காட்டிகொண்டு இருந்தன, ஒவ்வொருவரையா அழைத்து போய் படம் பார்த்திட்டு வாங்க,போய் படம் பார்த்திட்டு வாங்க வசூல் பிச்சை கேட்டார்கள், அந்த நேரத்தில் எத்தனை எழவு, கொலை , கற்பழிப்பு நடந்திருக்கும் ? எதாவது சொன்னார்களா ?


விளம்பர பிசாசு ஊடகங்கள் ஒரு நடிகனின் மயிருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என் தமிழ் சொந்தங்களின் உயிருக்கு கொடுக்கவில்லை என்பதே உண்மை. 24 மணி நேரமும் நடிகன், நடிகன், பிசாசு ஊடங்கங்களே ஏழு கோடி எம் இனத்தில் ஏழு நடிகன் கூட இல்லைடா, இவனுகளுக்கு கொடுக்கும் ஒரு முக்கியத்துவத்தில் ஒரு சதவீதம் (ஒரு 10 நிமிடம்) ஒவ்வொரு ஊடகமும் ஒரு விவசாய, கல்வி போன்ற நிகழ்ச்சியை போடுங்களேன், அதற்கும் நடிகைகளைதான் தேடுவீர்கள். ம் ....ம்..ம்.ம். தமிழன் பண்டிகையாம் பொங்கல் வைக்கும் நிகழ்சிகே என் இனம் அறியா நடிகைதானே உங்கள் விருந்தினர்

அதுவம் ஒரு தொலைகாட்சியில் ஊரில் உள்ள ஏழை குடும்பங்களில் உள்ள சிறு பிரச்சனைகளை காசாக்கி கொண்டுள்ளனர். ஒரு கணவன் , மனைவி ஒரு குடும்பம் என வாழும் ஒரு ஏழை குடும்ப சூழ்நிலைகளை காசாக்கும், கருப்பு பிசாசு ஊடகங்கள் ஏன் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு குடும்பம் நடத்தும் கூத்தாடி நடிகன் நடிகர்களின் வாழ்க்கையை வைத்து பணம் சம்பாதிக்கலாமே ? ஏழை வீட்டில் எழவு என்றாலும் நீங்கள் பணம் பார்ப்பீர்கள்
அதுவும் ஒரு தொலைகாட்சியில் 70 வயது கிழவியின் ஒப்பனையை பார்க்கணுமே, ஒரு பெண்ணை அரைகுறை அண்ட்ராயரில் ஆடவிட்டு சும்மா, கிலி, கிலி நு கிலிசிடிங்க பேசும் இவள்கள் நிகழ்ச்சியை பார்க்கும் பிள்ளைகள் எப்படி நற்ககுணக்களோடு வளரும் ? இந்த நாடு நாசமாய் போவதற்கு இந்த கூத்தாடிகளும். ஊடகங்களுமே (எல்லா ஊடகங்ளையும் இல்லை ) காரணம்

No comments:

Post a Comment