GOOGLE

Wednesday, May 20, 2015

சேவல் சண்டை, ஜல்லி கட்டுக்கு தடை தேவையா ?



சேவல் சண்டை, ஜல்லி கட்டுக்கு தடை தேவையா ?

சில கருத்துகளை நான்/ நாம் ஏற்று கொள்ளலாம்

1. கத்தி கட்டுவது தடுக்க பட வேண்டும்

2. சாராயம் போன்ற போதை பொருள் பயன் படுத்த கூடாது

இவைகள் ஏற்க கூடிய விசியங்கள் , ஆனால் சேவல் சண்டையே கூடாது என்பது சரி இல்லை
தமிழனின் பாரம்பரிய, தொன்று தொட்ட, வரலாறோடு ஒருங்கிணைத்த பண்பாடுகளை தடை செய்வது சரிஇல்லை
இது திட்டமிட்டு தமிழனின் பண்பாடையும், அவனின் கால்நடை சார்ந்த வாழ்க்கை முறையும் ஒழிபதாகும்

எடுத்துகாட்டாக. காங்கேயம் காளை என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் சொந்தமான எந்த மாநிலத்திலும், ஏன் ? நாட்டிலும் இல்லாத ஒரு கம்பிரமான கட்டுடல் கொண்ட இனம், அந்த இனத்தை வளர்த்து அதில் ஏறி தழுவுதல் (ஜல்லி கட்டு) என்பது தமிழனால் மட்டும் முடியும்... அப்பா சல்லி கட்டை ஒழித்தால், காங்கேயம் இனம் ஒழியும், தமிழனின் பண்பாடு, வீரம் அழியும், அது போலத்தான் கோழி சண்டையை ஒழித்தால் அசில் என்ற தமிழ் நாட்டுக்கு சொந்தமான அசில் என்ற கோழி இனம் அழியும்

இவ்வாறு தமிழனின் வாழ்வு முறையும், கலாசாரத்தையும் அழிக்க முடியும்
சரி ஜல்லி கட்டு, கோழி சண்டை தடை சரி என சொல்லும் என் சொந்தகளுக்கு என்னிடம் சில நியாயமான கேள்விகள்


1. கோவிலில் இருக்கும் யானையை பாகன் எப்படி தன் கட்டுப்பாடில் வைத்து இருக்கான் ? குத்து ஊசியால் குத்துவது இல்லையா?

2. மாட்டை தடியால் தட்டாமல் ஏர் உழ முடயுமா ?

3. கோமாரி நோயால் லட்சகணக்கான கால்நடைகள் உயிர் மாண்டபோது இந்த இயக்கங்கள்( மிருக வதைத் தடுப்புச் இயக்கங்கள்) என்ன முயச்சி எடுத்தார்கள்? எங்கே சென்றார்கள் ?

4. பணக்காரர்கள் குதிரை பந்தையம் என்ற பெயரில், குதிரையை தனது சூதாடதுக்கு பல மயில் துரதுகிரார்களே அது குற்றம் இல்லையா? அது மிருக வதைத் இல்லையா?
5. மிருக வதைத் தடுப்புச்
இயக்கங்களில் இருப்பவர்கள் யாரும் ஆடு, மாடு, கோழி என்ற எந்த மாமிசமும் சாபிடாதவர்களா? அது மிருக வதைத் இல்லையா?

6. தினம் , தினம் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்கு பல ஆய்ரம் மாடுகள் அடிமாடுகளாக கடத்த படுகிறதே, அது மிருக வதைத் இல்லையா? அதை தடுக்க இந்த இயக்கங்கள் என்ன செய்தன?

7. ஊஎரியல் பூங்காக்களில், பறவை, பாம்பு, சிங்கம், புலி என அணைத்து வகை கால்நடைகளையும் அடைத்து வைத்து பணம் சம்பாதிப்பது மிருக வதைத் இல்லையா? அவை விருப்ப பட்டா கூண்டில் வாழ்கின்றன ? அதை தடுக்க இந்த இயக்கங்கள் என்ன செய்தன?

இது போன்று எவலோவோ சொல்லலாம், இதெற்கெல்லாம் இந்த இயக்கங்கள் என்ன செய்தன?


No comments:

Post a Comment