GOOGLE

Wednesday, May 20, 2015

விவசாயம் என்ன பணம் கொழிக்கும் தொழிலா?


சில பச்சை அட்டை கொண்ட வார, மாத இதழ்கள் நல்ல அலங்காரத்துடனும், கண்கவரும் இயற்கை சூழல் கொண்ட புகைபடத்துடன் விவசாயம் பற்றி இன்றைய இளைனர்களை தவறாக வழி நடத்துகின்றனர் அதுவும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்தாராம் , வேலையை விட்டாராம் , மாதம் இலட்சம் சம்பாதிகிராராம் என்று ஆசை வார்த்தைகளை சொல்லி ஏமாற்றுவது வேதனை அளிக்கிறது


மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர் விவசாயம் செய்வது உண்மையாகலாம், ஆனால் அவர் இப்போது மென்பொருள் வேலை செய்பவராக இருக்கலாம் , ஆனால் அவர் தலைமுறை விவசாயமாக இருக்கும், அவர் செய்த தொழில் விவசாயமாக இருக்கும் , அவர் படித்தது விவசாயத்தை நம்பி இருக்கும். அதனால் அவருக்கு இயல்பாகவே விவசாயம் பற்றிய நம்பிகையும், அதனை பற்றிய அனுபவமும் இருப்பதால் இன்றைய சில தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி வெற்றி பெறமுடியும் அதுவும் எல்லா நேரங்களிலும் முடியாது, விவசாயம் என்பது இயற்கை மற்றும் மனித வாழ்வியல் முறையை சார்ந்தவை, முற்றிலுமான தொழில் சார்ந்தவை இல்லை, ஆதலால் விவசாயம் என்பது பணம் கொழிக்கும் தொழில் என்ற வார்த்தையை முதலில் தவிருங்கள்


விவசாயம் ஒரு பணம் கொழிக்கும் தொழில், பணம் கொழிக்கும் தொழில் என்று அட்டை பக்கத்தில் எழுதுவதை முதலில் தவிருங்கள், அது உங்களுக்கு ஆயர கணக்கில் ஏடுகள் விற்பதால் பணம் கொழிக்கலாம், விவசாயம் செய்பவர்களுக்கு இல்லை. விவசாயம் ஒரு உன்னதமான வாழ்கை முறை , அதை செய்து தன் குடும்பத்தை நடத்தலாம், பிள்ளைகளை படிக்க வைக்கலாம், ஆனால் லட்சத்தில் கொழிக்கமுடியாது, அப்படி விவசாயத்தில் இலட்சம் கொழிக்க வேண்டுமானால் சில நூறு ஏக்கர் வைத்திருக்கும் நாட்டாமையாக இருக்கவேண்டும், சில ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயால் முடியாது.
விவசாயம் ஒரு உன்னதமானவை, அதை நடிகைகளின் கிசு கிசு போன்று விளபரம் செய்து பணம் சம்பாதிக்காதிர்
மீண்டும் சொல்கிறேன்

விவசாயம் ஒரு பணம் கொழிக்கும் தொழில் அல்ல, அது வாழ்க்கைமுறை



No comments:

Post a Comment