GOOGLE

Monday, May 18, 2015

காசாக்கப்படும் விவசாயின் வாழ்க்கையும், பந்தா காட்டும் பரதேசிகளும்......



விவசாயின் வாழ்கை முறை காசாக்கப்படும் பொருளாக மாறிவிட்டன. நடிகன் முதல்,மீடியா, அரசியல்வாதிகள் வரை நம் வாழ்வை காட்டி பணம் சம்பாதிக்கும் பரதேசிகள். ஏன் எல்லோரையும் குறைகூற வேண்டும் என கேக்கலாம், என் ரத்தம் உறிஞ்சும் அட்டை பூச்சிகளை காறித்துப்பாமல் கைகூப்பியா வரவேற்கமுடியும் ?


விவசாயின் மேல் அக்கறை காட்டுகிறார்களாம், அக்கறை காட்டுபவர்கள் ஏன் விவசாயோடு களத்தில் நிற்க மறுகின்றனர், ஒரு படத்தில் வசனம்
'என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுவிடாதிர்கள்" அய்யோ புள்ளரிக்குது என்னை பற்றி பேசவும் ஒரு நடிகன் இருக்கானே, ஒரு இயக்குனர் இருக்கானே என்று, இவ்வசனம் பேசி என் விவசாயடமே சம்பாதித்த பணம் பலகோடி , எனக்கான ஆதங்கம் என் வாழ்வை பணமாக்கும் நீங்கள் எங்கள் வாழ்வில், எங்கள் போரட்டத்தில் எங்களுடன் கைகோர்த்த ஒரு நிகழ்வை கூறுங்கள் பார்போம்


அடுத்து மீடியாக்கள்(எல்லா மீடியாகளையும் குறைகூறவில்லை) பொங்கலுக்கும் வெளிமாநில முதுமுக தொப்புள் நடிகைக்கும் என்ன சம்பந்தம்? பொங்கல் தமிழனின் பாராம்பறிய ஒரு பண்டிகை, அந்நாளில் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அம்மக்களை, அவர்களின் உழைப்பை ஏன் ஒளிபரப்பி அவர்களை சந்தோஷ படுத்தகூடாது இந்த மீடியாக்கள் ? கூத்தாடியின் கையில் ஒரு கரும்பு கொடுத்து பொங்கல் பற்றி பேட்டி எடுக்கின்றனர்? அவள் கரும்பை கம்பு என்கிறாள், பொங்கலை போங்கள் என்கிறாள், கோலம்போடுதலை , காலம்போடுது என்கிறாள், பெண்கள் என்பதை பேன்கள் என்கிறாள் , இதை கேட்டு அவர்களுக்கான கட்டளை நேரத்தில் அவர்களே கைதட்டி சிரித்து என் உழவனின் பண்டிகையை பணமாக்கும் பரதேசிகள்


அடுத்து நம்மை ஆளும் நம் சொந்தங்கள் அதிரகார மையம், விவசாயின் வாழ்கையை பணமாகுவதில் முதல்நிலை அடைந்தவர்கள், ஆளும்கட்சி, எதிர் கட்சி விவசாயை காப்பாதுவதில் என்னே ஒரு அக்கறை, மீதேன் எடுப்பவர்கள் ஏதோ செய்வாய் கிரகத்தில் இருந்து நடு சாமத்தில் நெல்லை மாநிலத்தில் இறங்கி நெற் பயிறுக்குள் இவர்களுக்கு தெரியாமல் ஒழிந்து கொண்டது போலவும், எல்லோரும் தூங்கிய பிறகு மீதேன் எடுத்து விட்டு மீண்டும் ஒழிந்துகொள்வது போலவும், மின் பற்றாக்குறை காரணமாக மீதேன் எடுப்பவர்களை கண்டுபிக்க முடியவில்லை என்கிற போலவும் என் மக்களை ஏமாற்றுகின்றனர், இவர்களே பலநூறு கோடி நம் விவசாயின் வாழ்கையை மீதேன் எடுப்பவனிடம் விற்று விட்ட பரதேசிகள்


எல்லா மட்டத்திலும் உள்ள பரதேசிகள் விவசாயை பரதேசியாக்கி பணம் சம்பாதிகின்றனர் பணம் தின்னும் பரதேசிகள்


No comments:

Post a Comment